கோவை வரும் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

கோவை, பிப்.26:  கோவை வருகை தரும் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க திமுக இளைஞர் அணி அமைப்பாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி பகுதி கழக அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம் கிராஸ்கட் ரோட்டில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. மாவட்ட அமைப்பாளர்கள் தளபதி இளங்கோ, கோட்டை அப்பாஸ் ஆகியோர் தலைமை தாங்கினர். துணை அமைப்பாளர்கள் திருமலைராஜா, கேபிள் மணி, செந்தமிழ்செல்வன், சோமு என்ற சந்தோஷ், கோவை ராஜா, பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கார்த்திக் எம்எல்ஏ சிறப்புரையாற்றினார். இதில், கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம்:திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை வரும் மார்ச் மாதம் முழுவதும் கொண்டாட வேண்டும். வரும் மார்ச் 5ம் தேதி கோவை வருகை தரும் திமுக இளைஞர் அணி செயலளர் உதயநிதிஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கிரிக்கெட் லீக் போட்டியை மாவட்டம் முழுவதும் சிறப்பாக நடத்த வேண்டும்.

Advertising
Advertising

வரும் மார்ச் 11ம் தேதி கோவை மாநகராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டித்து நடைபெறும் திமுக முற்றுகை போராட்டத்தில் இளைஞர் அணியினர் பெரும் திரளாக பங்கேற்க ேவண்டும். இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  இக் கூட்டத்தில், இளைஞர் அணி நிர்வாகிகள் அருண்குமார், துரை.பிரவீன்குமார், மணிகண்டன், மதன்குமார், லாரா பிரேம்தேவ், தினேஷ்குமார், அருண், நாகராஜ், ரகுராமன், பிரவின்ராஜ், தென்றல் பிரியன், வேலுச்சாமி, கண்ணன், அருண் பிரசாத், சுரேஷ், பாபு கணேஷ், செல்வேந்திரன், கவுசிக்குமார், மனோஜ், பிரசாந்த், சரவணன், உதயகுமார், பாலாஜி, ரமேஷ், இப்னுமசூது, சங்கர், கார்த்திக், டியோ மணி, சந்தோஷ், ஆல்வின், விஜயகணேஷ், சதீஷ்குமார், சதாம், தம்பிதுரை, தனபால், மோகன், ரகு, ராகுல், அன்பு, சூரியா, செந்தில்நாதன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: