குளித்தலை ஒன்றியக்குழு கூட்டம் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு திமுக கவுன்சிலர் எதிர்ப்பு

குளித்தலை, பிப். 20: கரூர் மாவட்டம் குளித்தலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு சாதாரண கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் விஜய் விநாயகம் தலைமை வகித்தார் ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குனர் உமா சங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மங்கையர்க்கரசி குமரவேல் திமுக மாவட்ட கவுன்சிலர் தேன்மொழி தியாகராஜன் ஒன்றியக்குழு துணைத்தலைவர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னிலை வகிக்க வந்த மாவட்ட கவுன்சிலர் தேன்மொழி தியாகராஜனுக்கு இருக்கை வசதி மேடையில் இல்லாததால் அவர் ஒன்றியக்குழு உறுப்பினர்களோடு இருக்கையில் அமரும் நிலை ஏற்பட்டது .மரபு கருதி அவரை மேடையில் அமர செய்ய வில்லை.

தொடக்கத்தில் ஒன்றியக்குழு தலைவர் விஜய் விநாயகம் தலைமை உரையாற்றினார் அதன் பிறகு ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அறிமுகம் நடைபெற்று தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது அப்போது தமிழகத்தில் பல்வேறு காரணங்களினால் நடைபெறாமல் இருந்த உள்ளாட்சித் தேர்தலை உறுதியாக நின்று தமிழக அரசு வாக்குறுதி அளித்தபடி நடத்தி முடித்து மக்கள் பணி பாதிக்காமல் தொய்வின்றி தொடர்ந்து நடைபெற வழிவகை செய்த தமிழக முதல்வர் துணை முதல்வர் ஆகியோருக்குநன்றி தெரிவித்து தீர்மானம் வாசிக்கப்பட்டது.அப்போது திமுக ஒன்றிய கவுன்சிலர் சந்திரமோகன் பேசியதாவது: உள்ளாட்சி தேர்தல் கொண்டுவர வேண்டுமென திமுக தலைமை நீதிமன்றம் சென்றது அதன் அடிப்படையில்தான் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது அதனால் இந்த தீர்மானத்தை எதிர்க்கிறேன் என கூறினார் அப்போது கூட்டத்தில் மவுனமாக இருந்துவிட்டனர் அதனைத்தொடர்ந்து 33 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதில் திமுக கவுன்சிலர்கள் சாந்தா ஷீலா விஜயகுமார், சந்திரமோகன், முருகேசன், சங்கீதா, அதிமுக கவுன்சிலர்கள் அறிவழகன் ராஜேஸ்வரி கவுரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: