வீட்டிற்குள் புகுந்து திருடிய 3 பேரை 12 மணி நேரத்தில் பிடித்து சிறையிலடைத்த போலீசார்

கரூர், ஏப். 30: திறந்து வைத்த வீட்டிற்குள் புகுந்து திருடிய 3 பேரை புகார் கொடுத்த 12 மணி நேரத்தில் பிடித்து சிறையில் அடைத்தனர். கரூர் மாவட்டம், கரூர் நகர உட்கோட்டம், கரூர் நகர காவல்நிலைய எல்லைக்குட்பட்ட வேலுச்சாமிபுரம் கேஏ நகர் பகுதியில் வசிப்பவர் அழகன் என்பவர் மகன் செந்தில்குமார் (42) . இவர் வேலுச்சாமிபுரம் அருகே கோழிக்கடை நடத்தி வருகிறார் . கடந்த 28 ம் தேதி வீட்டின் வெப்பம் அதிகமாக இருந்த காரணத்தால் இவரது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வீட்டின் கதவை திறந்து வைத்து விட்டு வீட்டின் வெளியே படுத்து தூங்கி உள்ளனர். இந்நிலையில் 28ம் தேதி நள்ளிரவு 12 மணி அளவில் கோழி கடையில் உள்ள வசூலை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார்.

எப்போதும் அவர் இரவு படுக்கும் பொழுது அவருடைய மனைவியின் செல்போனில் அலாரம் வைப்பது வழக்கம். வீட்டுக்கு வந்தவுடன் மனைவியின் செல்போனில் அலாரம் வைக்க பார்த்தபோது செல்போனை காணவில்லை. எங்கும் தேடியும் செல்போன் கிடைக்கவில்லை. அப்போது வீட்டில் வைத்திருந்த பீரோ உள்ளே இருந்த பொருட்கள் அங்குமிங்கும் கலைந்து கிடந்துள்ளது. அதன் பின் அவர் பிரோவில் பார்த்தபோது அதிலிருந்து நகைகள் காணாமல் போயிருந்ததாகவும், வீட்டினுள் நுழைந்து யாரோ திருடி சென்றதும் தெரிய வந்தது. இந்த திருட்டு தொடர்பாக செந்தில்குமார் நகைகளை மீட்டு தருமாறு 28ம் தேதி காலை கரூர் டவுன் போலீசில் புகார் செய்தார்.
டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன் குற்றவாளியை தேடினர்.

இந்த திருட்டு தொடர்பாக வேலுச்சாமி புறம் பகுதியைச் சேர்ந்த நாகராஜன் (21), அதே பகுதியைச் சேர்ந்த ஜீவா( 28 ), கரூர் வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த கிருபா ஜோயல் ஆகியோரை சந்தேகத்தின் பேரில் அழைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் செல்போன், நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டு அதற்கான பொருட்களை போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை சிறையில் அடைத்தனர்.
கரூர் மாவட்ட எஸ்பி பிரபாகர் உத்தரவின் பேரில் கரூர் நகர உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் போலீசார் மேற்பார்வையில் குற்றவாளிகளை திருட்டு நடந்த 12 மணி நேரத்திற்குள் கைது செய்த போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாராட்டி பரிசு வழங்கினார்.

The post வீட்டிற்குள் புகுந்து திருடிய 3 பேரை 12 மணி நேரத்தில் பிடித்து சிறையிலடைத்த போலீசார் appeared first on Dinakaran.

Related Stories: