குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து குரும்பூரில் முஸ்லிம்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்ெசந்தூர், பிப். 19:  குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து குரும்பூரில் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் கண்டன ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது.குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும் இதை திரும்பப்பெற வலியுறுத்தியும்  நாடு முழுவதும் முஸ்லிம் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் குரும்பூர், நாலுமாவடி, புறையூர், ஜமாத், இயக்கங்கள் மற்றும் பல்வேறு கட்சிகள் கூட்டமைப்பு சார்பில் குரும்பூரில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.  இதையொட்டி பெட்ரோல் பங்க் பகுதியில் இருந்து துவங்கிய ஊர்வலம் முகைதீன் ஜூம்ஆ பள்ளிவாசல் நுழைவாயிலில் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து அங்கு நடந்த  கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு குரும்பூர் ஜமாத் தலைவர் சேக்பரிது தலைமை வகித்தார். துணைத்தலைவர் ஹாஜி பாபு வரவேற்றார். குரும்பூர் ஜமாத் செயலாளர் ஜாகீர் உசேன், நாலுமாவடி ஜமாத் தலைவர் இல்யாஸ், புறையூர் ஜமாத் பொருளாளர் கான் முன்னிலை வகித்தனர். இதில் திராவிடர் விடுதலை கழக பரப்புரை செயலாளர் பால் பிரபாகரன், அழைப்பு பணி அபுதாஹீர், மாநில பேச்சாளர் முஹமதுரியாஸ்தீன், மாவட்ட எஸ்டிபிஐ மாவட்டச் செயலாளர் மைதீன்கனி, நாம் தமிழர் கட்சி தெற்கு மாவட்டச் செயலாளர் சுப்பையா பாண்டியன், அகரம் தமிழர் கட்சி குயிலி நாச்சியார் உள்ளிட்டோர் குடியுரிமை சட்டத்தை கண்டித்து பேசினர்.

 போராட்டத்தில் ஆழ்வை ஒன்றிய சேர்மன் ஜனகர், திமுக இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் ராமஜெயம், ஆழ்வை ஒன்றியச் செயலாளர் நவீன்குமார், குரும்பூர் நகரச் செயலாளர் பாலம் ராஜன், இலக்கிய அணி துணைச் செயலாளர் அன்பழகன், முஸ்லிம் அமைப்பினர் மற்றும் பெண்கள் என திரளானோர் பங்கேற்றனர். புறையூர் ஜமாத் அப்தூல் ரஹிம் நன்றி கூறினார்.

Related Stories: