கொண்டத்து மாகாளியம்மன் கோயில் 160ம் ஆண்டு குண்டம் திருவிழா

கோவை,  பிப். 19:   கோவை வெள்ளலூர் வெள்ளாளபாளையம் கொண்டத்து  மாகாளியம்மன் கோயில் 160ம் ஆண்டு குண்டம் திருவிழா கடந்த 4ம் தேதி சாமி  சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. இதைத்தொடர்ந்து .11ம் தேதி அக்னி  சாட்டுதல், 14ம் தேதி 108 விளக்கு பூஜை வழிபாடு, 16ம் தேதி தீர்த்த காவடி  பூஜை ஆகியவை நடந்தன. இதில் முக்கிய நிகழ்ச்சியாக இன்று (19ம் தேதி) காலை 5  மணிக்கு அம்மன் ஆற்றுக்கு செல்லுதல், தொடர்ந்து காலை 11 மணிக்கு குண்டம்  இறங்குதல் நடக்கிறது. மதியம் அன்னதானம், மாலை மாவிளக்கு பூஜை நடைபெற  உள்ளது. மேலும் 20ம் தேதி மஞ்சள் நீராடுதல், 21ம் தேதி அம்மன் திருவீதி  உலா, ஊஞ்சல் தாலாட்டு, 25ம் தேதி பிளேக்மாரியம்மன், மதுரை வீரன், முனியப்ப  சாமிக்கு மறுபூஜையுடன் விழா நிறைவுபெறுகிறது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை  கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Related Stories: