குடியாத்தம் அடுத்த பரதராமியில் சிறப்பு மனுநீதி நாள் முகாமில் 199 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி கலெக்டர் வழங்கினார்

குடியாத்தம் பிப்.13: குடியாத்தம் அடுத்த பரதராமியில் சிறப்பு மனுநீதி நாள் முகாமில் 199 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். குடியாத்தம் அடுத்த பரதராமியில் நேற்று சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார், கோட்டாட்சியர் தினகரன் (பொறுப்பு) வரவேற்றார். இதில் எம்எல்ஏ லோகநாதன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் எஸ்.எஸ்.ரமேஷ் குமார் வாழ்த்தி பேசினர். இதில் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் ரமேஷ், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் கலைவாணி, கால்நடைத்துறை இணை இயக்குனர் நவநீதகிருஷ்ணன், மாவட்ட வழங்கல் அலுவலர் பேபி இந்திரா ஆகியோர் துறை சார்ந்த அரசு திட்டங்களை குறித்து விளக்கி பேசினர்.

இதில் 199 பயனாளிகளுக்கு ₹2 கோடியே 75 லட்சத்து 30 ஆயிரத்து 410 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. முடிவில் தாசில்தார் வத்சலா நன்றி கூறினார்.

Advertising
Advertising

Related Stories: