பெண்ணிடம் ரூ.1 லட்சம் நகை பறிப்பு

திருச்செந்தூர், பிப். 13: திருச்செந்தூர் அருகே குளித்துவிட்டு சென்ற பெண்ணிடம் ரூ.1 லட்சம் மதிப்புள்ள நாலரை பவுன் நகையை பறித்து பைக்கில் தப்பிய மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.  திருச்செந்தூர் அருகே உள்ள ராணிமகாராஜபுரம் மேலதெருவைச் சேர்ந்தவர் செபஸ்டின்ராஜ்.  தூத்துக்குடியில் உள்ள டிராவல்ஸ் ஆபிசில் புக்கிங் அலுவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி செல்வி(47).தனியார் மருத்துவமனையில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் காலையில் செல்வி ஊருக்கு அருகே உள்ள மரபாலம் வாய்க்காலில் குளித்து துணிதுவைத்துவிட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். வாளியை தலையில் வைத்து சென்ற போது, அங்கு பைக்கில் வந்த மர்ம நபர்கள் வாளியை தள்ளிவிட்டு கழுத்தில் கிடந்த நாலாரை பவுன் செயினை பறித்துவிட்டு தப்பி சென்றனர்.  இதன் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும். இதுகுறித்த புகாரின் பேரில் திருச்செந்தூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: