மீளவிட்டான் ரயில்வே மேம்பால பணியை விரைந்து முடிக்க மனு

தூத்துக்குடி,ஜன.28: ஜனநாயக தரைவழிப்போக்குவரத்து ஓட்டுனர் மற்றும் பொதுத்தொழிலாளர் நலச்சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் சகாயம் தலைமையில் நிர்வாகிகள் கலெக்டர் சந்தீப்நந்தூரியிடம் கொடுத்துள்ள கோரிக்கை மனு:

தூத்துக்குடி-மதுரை இடையே நான்குவழிச்சாலை அமைக்கப்பட்டு வாகனப்போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த நான்குவழிச்சாலையில் சிப்காட்-துறைமுகம் பைபாஸ் சாலையில் மீளவிட்டான் ரயில் நிலையம் அருகில் வாகனங்கள் செல்வதற்கு ஏதுவாக மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு பகுதியில் மட்டுமே மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், சாலையின் மற்றொரு பகுதியில் மேம்பாலம் கட்டும் பணிகள் பலவருடங்களாகியும் இன்னும் நிறைவடையவில்லை. இதனால் வாகனங்கள் சென்று வருவதில் பெரும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. அதோடு இந்தப்பகுதியில் சாலைகள் மிகவும் மோசமாக இருப்பதுடன், மின்விளக்கு வசதிகள் எதுவும் இல்லை. இதனால் இரவு நேரங்களில் வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்கள் விபத்துக்களில் சிக்கும் அபாய நிலை தொடர்கிறது. இதனை தவிர்த்திட மேம்பாலம் கட்டும்பணிகளை விரைந்து முடிக்கவேண்டும்.தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து டோல்கேட் வரையிலும் மிகவும் மோசமான நிலையிலுள்ள சாலையை துரிதமாக சீரமைக்கவேண்டும், மின்விளக்கு வசதி செய்து கொடுத்திடவேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Advertising
Advertising

Related Stories: