இளம்புவனம் கண்மாயில் சரள் மண் திருட்டு

எட்டயபுரம்,ஜன.23: இளம்புவனம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் கணேசன் தலைமையில் கிராம மக்கள் எட்டயபுரம் தாலுகா அலுவலகத்தில் அளித்துள்ள மனு: இளம்புவனம் மற்றும் சின்னமலைக்குன்று கிராமங்களில் உள்ள கண்மாய்களில் முறைகேடாக அரசு அனுமதியின்றி லாரிகளில் சரள் மண் திருட்டு நடக்கிறது. இதனால் கண்மாயில் தண்ணீர் தேங்காமல் விரைவாக வற்றி விடுவதால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரள் மண் திருட்டை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. உடன்  இளம்புவனத்தை சேர்ந்த முனீஸ்வரன், காளிராஜ், சுரேஷ், பரமசிவம், மாடசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertising
Advertising

Related Stories: