பரங்கிப்பேட்டை வட்டாரத்தில் உளுந்து விளைச்சல் அமோகம்

புவனகிரி, ஜன. 22: காவிரி டெல்டா பாசனத்தின் கடைமடை பகுதியாக விளங்குவது பரங்கிப்பேட்டை வட்டாரம். இந்த ஒன்றியத்தில் சமீபத்தில் நெல் அறுவடை பணிகள் முடிவடைந்துள்ளன. இதையொட்டி வயல்களில் நடப்பட்டிருந்த உளுந்து செடிகள் நல்ல வளர்ச்சியைக் கண்டுள்ளது. குறிப்பாக பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள சின்னகுமட்டி, பெரியகுமட்டி, சம்மந்தம், ஆணையங்குப்பம், கொத்தட்டை, பஞ்சங்குப்பம் உள்ளிட்ட ஏராளமான கிராமங்களில் வயல்களில் உளுந்து செடிகள் அமோகமாக வளர்ந்துள்ளன. வயலில் செடிகள் நன்றாக வளர்ந்து பச்சை பசேலென காட்சியளிக்கிறது. உளுந்து செடிகள் நல்ல வளர்ச்சி அடைந்துள்ள நிலையில், பூச்சி தாக்குதல், நோய் தாக்குதல் போன்ற இடர்பாடுகள் இல்லாவிட்டால் இந்த ஆண்டு உளுந்து மகசூல் கணிசமாக அதிகரித்து விவசாயிகளுக்கு நல்ல லாபத்தை கொடுக்கும். இதனால் பரங்கிப்பேட்டை வட்டார விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: