இரு தரப்பினர் மோதல் 40 பேர் மீது வழக்கு பதிவு

 

கடலூர், மே 5: இருதரப்பினர் மோதலில் 40 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, அதில் 2 பேரை கைது செய்தனர்.கடலூர் தேவனாம்பட்டினம் தெற்கு கடற்கரை சாலையை சேர்ந்தவர் கோபி மகன் விஜி (30). இவரும், இவரது சகோதரர் வினோத் மற்றும் அவரது நண்பர் தினேஷ்குமார் ஆகியோர் தேவனாம்பட்டினம் மகத்துப்பட்டறை பகுதியில் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் விஜி, வினோத், தினேஷ்குமார் ஆகியோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டு அது மோதலாக மாறி, ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் விஜி, தினேஷ்குமார், வினோத் மற்றும் தகராறை தடுக்க வந்த தேவனாம்பட்டினம் பகுதியை சேர்ந்த பழனியம்மாள்(70) ஆகியோர் காயம் அடைந்தனர். இவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

இது குறித்து கடலூர் தேவனாம்பட்டினம் போலீஸ் நிலையத்தில் விஜி கொடுத்த புகாரின் பேரில் சுந்தர்ராஜ் (42) கலைச்செல்வன்(20), சாய் கணேஷ் (19),ஆனந்த், சாகிர் உசேன் உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து அதில் சுந்தர்ராஜ், கலைச்செல்வன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் பழனியம்மாள் கொடுத்த புகாரின் பேரில், பெயர் விலாசம் தெரியாத, அடையாளம் தெரிந்த சுமார் 33 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

The post இரு தரப்பினர் மோதல் 40 பேர் மீது வழக்கு பதிவு appeared first on Dinakaran.

Related Stories: