கோயில் கேட் பிரச்னையில் தகராறு இரு தரப்பை சேர்ந்த 6 பேர் கைது

திட்டக்குடி, மே 4: ராமநத்தம் அடுத்த வடகராபூண்டி கிராமத்தில் அரியநாச்சி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலின் முன்பக்க கேட்டில் அதே கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து, பிரபு, இவர்களின் தாயார் செல்லம்மாள் என பெயர் வைத்துள்ளனர். இந்நிலையில் கோயில் முன்பக்கம் கேட்டில் உள்ள பெயரை அகற்ற வேண்டும் என அதே கிராமத்தை சேர்ந்த அழகப்பன் மகன் சாமிதுரை (53) தரப்பினர் கூறியுள்ளனர். இதில் இவர்களுக்குள் இருந்த முன்விரோத காரணமாக கடந்த 1ம் தேதி வடகராம்பூண்டி தேமுட்டி அருகே மாரிமுத்து, பிரபு தரப்பைச் சேர்ந்த வடிவேல், ஆனந்த், தனம், கனகா, ராஜதுரை, ஸ்ரீதர் உட்பட 12க்கும் மேற்பட்டோர் சென்று சாமிதுரை தரப்பை சேர்ந்த அருணாசலம் மகன் சந்தோஷ்குமார் (43), ராமர் மகன் நாராயணசாமி (37), அழகப்பன் மகன் பன்னீர்செல்வம் (39), ராமர் மகன் இளையராஜா (30) ஆகியோரை திட்டி தாக்கியுள்ளனர். இதுகுறித்து சாமிதுரை கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதேபோல் மற்றொரு தரப்பினரன தர் (27) கொடுத்த புகாரின்பேரில் ராமநத்தம் போலீசார், இளையராஜா, சந்தோஷ், காட்டு ராஜா, பன்னீர்செல்வம், நாராயணசாமி, சாமிதுரை உட்பட சிலர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் சாமிதுரை கொடுத்த புகாரின்பேரில் அஞ்சலைதேவியையும், தர் கொடுத்த புகாரின் அடிப்படையில் காட்டு ராஜா, இளையராஜா, நாராயணசாமி, அழகுதுரை, ரமேஷ் உட்பட இருதரப்பை சேர்ந்த ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ளவர்களை தேடி வருகின்றனர்.

The post கோயில் கேட் பிரச்னையில் தகராறு இரு தரப்பை சேர்ந்த 6 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: