குடும்ப தகராறில் கார் டிரைவர் தற்கொலை

வேலூர், ஜன.20: வேலூர் அடுத்த நாகநதி கொல்லைமேடு பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார்(37), கார் டிரைவர். இவருடைய மனைவி தீபா(27). தம்பதிக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இருவருக்கும் இடையே குடும்ப பிரச்னை காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் தம்பதிகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் தீபாவை, உதயகுமார் தாக்கியதாக தெரிகிறது. இதில் படுகாயமடைந்த தீபா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Advertising
Advertising

இந்நிலையில், விரக்தியடைந்த உதயகுமார் நேற்றுமுன்தினம் காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இதுகுறித்து தகவலறிந்த வேலூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: