திருவள்ளுவர் கழக ஆண்டு விழா

கழுகுமலை,ஜன.20: கழுகுமலையில் திருவள்ளுவர் கழக 29ம் ஆண்டு விழா நடந்தது. கழுகுமலை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சீத்தாமகேஸ்வரி தலைமை வகித்தார். கந்தையா வரவேற்புரையாற்றினார். சிறப்பு சொற்பொழிவினை திருநெல்வேலி கலைஞர் சங்கம் தழிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் நாறும்பூநாதன் உரையாற்றினார். தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, கட்டுரைப்போட்டி போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன. பின்னர் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், 10ம் வகுப்பு 12ம் வகுப்பு பாடங்களில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் பரிசளிப்பு பாராட்டு விழா நடந்தது.

Advertising
Advertising

பரிசினை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் நாறும்பூநாதன், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சீத்தா மகேஸ்வரி, இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, சங்க இலக்கிய பேரவை தலைவர் கணபதி, கோவில்பட்டி திருவள்ளுவர் மன்ற தலைவர் கருத்தப்பாண்டி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பரிசினை வழங்கினர்.

மேலும், திருவள்ளுவர் கழகச் செயலாளர் முருகன், பொருளாளர் சிவராமன் ஆகியோர் கலந்து கொண்டனர். திருவள்ளுவர் கழகத் தலைவர் பொன்ராஜ் பாண்டியன் நன்றி கூறினார்.

Related Stories: