தூத்துக்குடி மாவட்டத்தில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

வைகுண்டம், ஜன. 20: வைகுண்டம் மேடை பிள்ளையார் கோயில் அருகே எம்ஜிஆர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. நகர தலைவர் காசிராஜன் தலைமை வகித்தார். சண்முகநாதன் எம்எல்ஏ, எம்ஜிஆர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார். அதிமுக ஒன்றிய செயலாளர் ஆறுமுகநயினார், மாவட்ட பஞ். கவுன்சிலர் அழகேசன், முன்னாள் கவுன்சிலர் திருப்பாற்கடல், வை. கூட்டுறவு நகர வங்கி தலைவர் கருப்பசாமி மற்றும் நிர்வாகிகள் பால்துரை, சண்முகசுந்தரம், முத்துகருப்பன், வீரபாண்டியன், தக்கார் சுப்பையா, அய்யனார், திருப்பதி, திருப்பதி, அந்தோணி, சண்முகசுந்தர ராஜா, ரவி, ஒன்றிய கவுன்சிலர் ராமலட்சுமி நாகராஜன், அருணாசலம், பசுங்கிளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertising
Advertising

குளத்தூர் கக்கன்ஜி நகரில், எம்ஜிஆர் மன்றம் சார்பில்  எம்ஜிஆர் பிறந்த நாள் விழா கொண்டாட்டப்பட்டது. மன்ற  தலைவர் முருகேசபாண்டி தலைமை வகித்தார். செயலாளர் மாடசாமி, பொருளாளர் சவுந்தர், எட்டப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேச்சாளர்  மணி வரவேற்றார். விழாவில் பொதுமக்களுக்கு  இனிப்புகள் வழங்கப்பட்டது. அதிமுக குளத்தூர் கிழக்கு பகுதி நிர்வாகிகள்  கங்காதரன், இரட்டைமுத்து, சோலையப்பன், குமார், கன்னிசெல்வம் உள்ளிட்டோர் கலந்து  கொண்டனர். ராஜேந்திரன் நன்றி கூறினார்.

பாஞ்சாலங்குறிச்சி சிலோன் காலனியில் நடந்த விழாவிற்கு ஓட்டப்பிடாரம் தொடக்க கூட்டுறவு கடன் சங்க தலைவர் பெரியமோகன் தலைமை வகித்தார். மாவட்ட பஞ். உறுப்பினர் தேவராஜ் முன்னிலை வகித்தார். எம்ஜிஆரின் படத்திற்கு அதிமுகவினர் மரியாதை செலுத்தினர். புதியம்புத்தூர் பஸ் நிலையம் அருகே உள்ள எம்ஜிஆரின் சிலைக்கு நகர செயலாளர் ஆறுமுகச்சாமி தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்தனர். சாத்தான்குளம் அருகே தாமரைமொழி, முத்தம்மாள்புரம், நடுவக்குறிச்சி பகுதியில் நடந்த விழாவிற்கு யூனியன் கவுன்சிலர் லதா ஆனந்தகுமார் தலைமை வகித்து எம்ஜிஆர் படத்துக்கு மாலை அணிவித்தார். நடுவக்குறிச்சி பஞ். முன்னாள் தலைவர் ஆனந்தகுமார் முன்னிலை வகித்தார். இதில்  தாமரைமொழி ஊராட்சி அதிமுக  செயலாளர் ராஜேந்திரன், கிளை செயலாளர்கள் மருதன், ஆனந்தன், மகளிரணி மாரி, முத்துலட்சுமி, உமா உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.

ஆழ்வார்திருநகரி காமராஜர் சிலை, நாயக்கர் மண்டபம், ஆழ்வை முதல் பேருந்து நிறுத்தப் பகுதி என 3 இடங்களில் நடந்த விழாவிற்கு அதிமுக முன்னாள் தொகுதி இணை செயலாளர் ராஜப்பா வெங்கடாச்சாரி தலைமை வகித்தார். முன்னாள் தொகுதி இணை செயலாளர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். விழாவில், எம்ஜிஆர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் நாகமணி, நகர துணை செயலாளர் விஸ்வநாதன், மகளிரணி தலைவி மாஜிதா, வார்டு செயலாளர்கள் அய்யாகுட்டி, சிவசுப்பிரமணியன், கேடிசி பெரியசாமி, ரத்னபுரிகோபால், முன்னாள் கவுன்சிலர்கள் அனந்தவெங்கடாச்சாரி, சாமிசடகோபன், தணிகாசலம், ஆறுமுகம், முருகானந்த பெருமாள் மற்றும் அதிமுகவினர்,  கலந்து கொண்டனர்.

ஏரலில் நகர அதிமுக செயலாளர் ஆத்திப்பழம் தலைமை வகித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில் அதிமுக பிரமுகர்கள் ராஜா, நவநீதன், அய்யாப்பிள்ளை, பெரியசாமி, ராமநாதன், கார்த்திக், தினேஷ் உட்பட பலர் பங்கேற்றனர். அடைக்கலாபுரத்தில் நடந்த விழாவிற்கு ஜெ.பேரவை செயலாளர் இருதயராஜ் தலைமை வகித்தார். ராஜதுரை முன்னிலை வகித்து இனிப்பு வழங்கினார். இதில் அதிமுக நிர்வாகிகள் தங்கபாண்டி, தங்கராஜ், ஜெயசீலன், கோபி உட்பட பலர் பங்கேற்றனர். சாத்தான்குளம் அருகே இடைச்சிவிளை ரத்தினபுரியில் ஒன்றிய துணை தலைவர் அப்பாத்துரை தலைமை வகித்து அதிமுக கொடியேற்றி இனிப்பு வழங்கினார். ஒன்றிய இளைஞரணி செயலாளர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இதில் கிளை செயலாளர்கள் அதிரம் பாண்டி, முருகன், அழகேசன், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தட்டார்மடத்தில் நடந்த விழாவிற்கு ஒன்றிய எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். தொழிலதிபர் திருமணவேல் முன்னிலை வகித்தனர். எம்ஜிஆர் படத்துக்கு மாலையணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. விழாவில் கிளை செயலாளர்கள் செல்வன், சந்தர்ராஜ், பூல்பாண்டி, முருகன், வேலாயுதம், முருகன், தாமோதரன், கணேசன், மகாராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முதலூரில் நடந்த விழாவிற்கு பஞ். தலைவர் பொன்முருகேசன் தலைமை வகித்து அதிமுக கொடியேற்றி இனிப்பு வழங்கினார். இதில் ஒன்றிய அவைத்தலைவர் பரமசிவபாண்டியன், ஜெ. பேரவை தலைவர் சின்னத்துரை, ஒன்றியக்குழு உறுப்பினர் மீனாமுருகேசன், பஞ். துணை தலைவர் சுபாஷ், ஊராட்சி செயலாளர் தங்கராஜ், நிர்வாகிகள் செல்வராஜ், கென்னடி, மார்ட்டின், பிச்சமுத்து உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories: