கரூரில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்

கரூர், ஜன. 20:கரூர் கஸ்தூரிபாய் தாய்சேகரூர் மாவட்டத்தில் 831 மையங்களில் 1,13ஆயிரத்து 854 பிறந்த குழந்தைகள் முதல் 5வயதுக்குட்பட்ட அனைவரும் பயன்படுத்தும் வகையில் இந்த முகாமிற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கிராமப்பகுதிகளில் 736 மையங்கள், நகராட்சி பகுதியில் 95 மையங்கள் என மாவட்டம் முழுவதும் 831 மையங்கள் மூலம் சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது. மேலும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், தேர்வு செய்யப்பட்ட சில இடங்கள், பேருந்து நிலையம், ரயில்நிலையம், தனியார் குழந்தைகள் மருத்துவமனைகள் போன்ற பகுதிகளிலும் சொட்டு மருந்து மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணிகளில் மருத்துவர்கள், செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் என மொத்தம் 3360 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

மேலும் டிரான்சிஸ்ட் பூத்கள் கரூர் நகராட்சியில் 3 இடங்களிலும், குளித்தலை நகராட்சியில் 1 இடத்திலும் சேர்த்து மொத்தம் 8 இடங்களில் இந்த பூத்கள் செயல்படுகின்றன. சுங்கச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு அந்த வழியே பயணம் செய்யும் பயணிகளிடம் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு சொட்டு மருந்து வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த முகாமில் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இதற்கு முன் எத்தனை முறை சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும் மீண்டும் ஒரு முறை சொட்டு மருந்து கூடுதல் தவணையாகவும் வழங்கப்பட்டது. மேலும், அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஜனவரி 19ம்தேதி முதல் 25ம்தேதி வரை பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சொட்டு மருந்து முகாம் துவக்க விழாவில், எம்எல்ஏ கீதா, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் செல்வக்குமார், நகராட்சி கமிஷனர் சுதா உட்பட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்.

Related Stories: