பிரின்ஸ் வெங்கடேஸ்வரா கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்

சென்னை, ஜன.14: சென்னை, கௌரிவாக்கம், பிரின்ஸ் வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் என்எஸ்எஸ் திட்ட இயக்கம் சார்பில் மாடம்பாக்கம் பேரூராட்சியில் 7 நாள் சிறப்பு முகாம் நடந்தது. இதன் நிறைவு விழாவில் கல்லூரி தலைவர் கே.வாசுதேவன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் வா.பிரசன்னா வெங்கடேசன் வரவேற்றார். எஸ்னோரா அமைப்பின் துணைத் தலைவர் எ.எம்.மாலதி, அரிமா சங்க நிர்வாகி சுரேஷ், கல்லூரி முதல்வர் எம்.உமா பாஸ்கர், என்எஸ்எஸ் திட்ட அலுவலர்கள் ஆர்.சபீனா பேகம், ப.தனவந்தினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சென்னை பல்கலைக்கழக என்எஸ்எஸ் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் பாஸ்கர், முகாமில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தி பேசியதாவது.

பிரின்ஸ் கல்வி குழுமம் நாட்டு நலப்பணி திட்டத்துக்கு அதிக முக்கியத்துவம் அளித்து மாணவர்களை தன்னார்வலர்களாக உருவாக்கி வருகிறது. என்எஸ்எஸ் திட்டத்தில் இணையும் மாணவர்களுக்கு மத்திய அரசிடம் இருந்து நேரடியாக சான்றிதழ்கள் வாங்கப்படுகின்றன. அதன் மூலம் உங்களுக்கு கூடுதல் மதிப்பெண்களும், கல்வி உதவித் தொகையும், வெளிநாடுகளுக்கு சென்று மேற்படிப்பு மேற்கொள்ள ஏதுவாக இருக்கும்.தமிழகம் 4 லட்சம் தன் ஆர்வலர்களை கொண்டு இந்தியாவிலேயே என்எஸ்எஸ் திட்டத்தில் முதலிடத்தில் உள்ளது. இதில் இணைந்து சேவை புரிவதைமாணவர்கள் பெருமையாக கருத வேண்டும் என்றார். முகாமில் மாணவர்களுக்கு சுயதொழில், தற்காப்பு கலை, யோகா, ஆளுமைத் திறன் மேம்பாடு போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

Related Stories: