நந்தா சென்ட்ரல் சிட்டி பள்ளியில் மாணவர்களின் கைவினை பொருட்கள் கண்காட்சி “கார்னிவல் 20” துவக்கம்

ஈரோடு, ஜன. 12: நந்தா சென்ட்ரல் சிட்டி பள்ளியில் மாணவர்களின் கைவினை பொருட்களின் கண்காட்சி “கார்னிவல் 20” யின் துவக்க விழா நடந்தது.

இந்த கண்காட்சியினை ஈரோடு நகர் சரக துணை கண்காணிப்பாளர் எட்டியப்பன் மற்றும் வடக்கு சரக போக்குவரத்து காவல் ஆய்வாளர் தனசேகரன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்.இக்கண்காட்சிக்கு  நந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் வி. சண்முகன் தலைமை தாங்கினார். நந்தா கல்வி நிறுவனங்களின் முதன்மை நிர்வாக அதிகாரி டாக்டர் எஸ். ஆறுமுகம், ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் செயலர் எஸ். நந்தகுமார் பிரதீப்,நந்தா கல்வி நிறுவனங்களின் செயலர் எஸ். திருமூர்த்தி மற்றும் நந்தா சிட்டி பள்ளி முதல்வர் ஏ.ஜி. பிரகாஷ் நாயர் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

மாணவர்கள் தன்னுடைய சிந்திக்கும் திறன் அடிப்படையில் கண்ணாடி ஓவியம், காதணிகள், வளையல்கள், ஓவியங்கள், பொங்கல் விழாவையொட்டி பானை ஓவியம் போன்ற துறைகளில் உருவாக்கப்பட்ட சுமார் 200 எண்ணிக்கையிலான படைப்புகளை விற்பனை செய்யும் விதமாக இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாணவர்களின் கைவினைப் பொருட்களின் அரங்குகளை நந்தா கல்வி நிறுவனங்களை சார்ந்த 15 கல்லூரிகள் மற்றும் 3 பள்ளிகளின் முதல்வர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்கள்.

இந்த கண்காட்சியின் மூலம் கிடைத்த பணத்தினை நிதியாக ஈரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் விழங்கப்பட உள்ளது.  மேலும் கண்காட்சியினை தொடர்ந்து பொங்கல் விழாவும் கொண்டாடப்பட்டது. 1200க்கும் மேற்பட்டவர்கள் இந்த கண்காட்சியில் கலந்துகொண்டு பார்வையிட்டு சென்றனர்.

Related Stories: