ஆத்மநாத சுவாமி கோயிலில் மார்கழி திருவாதிரை திருவிழா

அறந்தாங்கி,ஜன.8: ஆவுடையார்கோவில் ஆத்மநாதசுவாமி கோயிலில் மார்கழி திருவாதிரை திருவிழா ஏழாம் நாள் விழாவை முன்னிட்டு திருவாடுதுறை 24வது குருமகாசந்நிதானம் அம்பலவாண பரமாச்சாரிய சுவாமிகள் தரிசனம் செய்தார்.

ஆவுடையார்கோவிலில் பழமையான ஆத்மநாதசுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் நடைபெற்று வரும் மார்கழி திருவாதிரை திருவிழாவை முன்னிட்டு ஏழாம் நாள் விழாவை முன்னிட்டு மாணிக்கவாசகர் இடப வாகனத்தில் காட்சி கொடுத்தார்.முன்னதாக கோயிலுக்கு வந்த 24வது குருமகாசன்னிதானத்தை ஆத்ம நாதர் சன்னதியில் பாலசுப்பிரமணிய நம்பியார் பூர்ணகும்ப மரியாதையுடன் வரவேற்றார். தொடர்ந்து ஆத்மநாதர் வீரபத்திரர் யோகாம்பிகை சுவாமியை தரிசனம் செய்து பின்னர் மாணிக்கவாசகர் இடப வாகன காட்சி கொடுத்தார். தீபாராதனை வழிபாட்டிற்கு வந்த சன்னிதானத்தை தியாகராஜ மாணிக்க குழுக்கள் வரவேற்றனர். தொடர்ந்து நடைபெற்ற வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தீபாராதனைக்கு பின்னர் மேளதாளம் முழங்க மாணிக்கவாசகரை குருத்தோலை சப்பரத்தில் வைத்து வீதிஉலா நடந்தது. விழாவுக்கான ஏற்பாடுகளை திருவாவடுதுறை 24வது குருமகாசந்நிதானம் உத்தரவுபடி மண்டல மேலாளர் முத்துகிருஷ்ணன் கண்காணிப்பாளர் சுப்பிரமணியன் மணியம் ராமன் ஆகியோர் செய்திருந்தனர். ஆத்மநாதர் உரிய சிறப்பு பூஜைகளை பாலசுப்பிரமணிய நம்பியாரும் மாணிக்கவாசகருக்கு உரிய சிறப்பு பூஜைகளை தியாகராஜ மாணிக்க குருக்களும் செய்தனர்.

Related Stories: