கந்தர்வகோட்டையில் காய்கறி விலை கிடுகிடு உயர்வு

கந்தர்வகோட்டை, மே 23: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் காய்கறி விலை கிடுகிடுவென உயர்ந்தது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை நகரில் சில தினங்களாகவே தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை மாறுபடுகிறது. இந்நிலையில் வாரந்தோறும் திங்கள்கிழமை நடைபெறும் வார சந்தை நடப்பு வாரத்தில் அதிகளவில் கடைகள் போடாததால் சரவர நடைபெறவில்லை.

மேலும் மழையின் காரணமாக காய்கறி வரத்து குறைந்ததால் விலையும் அதிகரித்தது. பீன்ஸ் ஒரு கிலோ 240 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 100 ரூபாய்க்கும், அவரை காய் கிலோ ரூ.200க்கும், பச்சைமிளகாய் கிலோ ரூ.100க்கும், உருளைகிழங்கு ஒரு கிலோ ரூ.50க்கும், தக்காளி ஒரு கிலோ 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த காய்கறி விலை திடீர் உயர்வால் உயர்வதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சிடைந்துள்ளனர்.

The post கந்தர்வகோட்டையில் காய்கறி விலை கிடுகிடு உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: