சுவர் இடிந்து 17 பேர் பலியான சம்பவம் நில உரிமையாளர் ஜாமீன் மனு மீது தீர்ப்பு தள்ளி வைப்பு

கோைவ, டிச. 19: மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலியான சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நிலத்தின் உரிமையாளரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது. கோவை மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில்17 பேர் பரிதாபமாக பலியாகினர். இது சம்பவம் குறித்து விசாரித்த போலீசார் விபத்துக்கு காரணமாக இருந்ததாக நிலத்தின் உரிமையாளர் சிவசுப்பிரமணியன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.இதையடுத்து, அவர் தனக்கு ஜாமீன் வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி என்.சேஷசாயி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் குற்றவியல் வக்கீல் டி.சண்முகராஜேஸ்வரன், மனுதாரர்சார்பில் வக்கீல் ஆர்.சி.பால்கனகராஜ் ஆஜராகி வாதிட்டார்.  நில உரிமையாளருக்கு ஜாமீன் கொடுக்கக்கூடாது என்று பலியானவர்களின் உறவினர்கள் மனு தாக்கல் செய்தனர். அவர்கள் சார்பில் வக்கீல் சங்கரசுப்பு, ரமேஷ் உள்பட பலர் ஆஜராகி வாதிட்டனர்.  அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

Related Stories: