வேப்பலோடை அரசு பள்ளியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கு

குளத்தூர்,டிச.11: வேப்பலோடை அரசு மேல்நிலைப்பள்ளியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. குளத்தூர் அடுத்த வேப்பலோடை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையம் சார்பில்  எய்ட்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. தலைமை ஆசிரியர் சேகர் தலைமை வகித்துப் பேசினார். உதவித் தலைமை ஆசிரியை புளோரிடா முன்னிலை வகித்தார். விளாத்திகுளம் அரசு மருத்துவமனை எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மைய ஒருங்கிணைப்பாளர் ராம்பிரசாத் சிறப்புரையாற்றினார்.

இதைத்தொடர்ந்து எய்ட்ஸ் நோயால் பாதிப்படைந்தவர்களை பராமரிக்கும் வழிமுறைகள் குறித்து மாணவர்கள் மருத்துவரிடம் கலந்துரையாடினர். அதையடுத்து எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு நாடகத்தை மாணவர்கள் நடத்தினர். வேப்பலோடை அன்னை தெரசா சங்கச் செயலாளர் ஜேம்ஸ் அமிர்தராஜ், பொருளாளர் முத்துகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர் கருப்பசாமி, ஆசிரியர்கள் ராமகிருஷ்ணன், ஜாய்பிரியா, பிச்சக்கனி, சோமசுந்தரி, வினுஷா, கிரேஸ்லின், பென்னிலா, ஜெரிட்டா, தமிழ்செல்வி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Related Stories: