ஊராட்சி தலைவர் பதவிக்கு 9 பேர் வேட்பு மனு தாக்கல்

வடலூர், டிச. 10: தமிழக தேர்தல் ஆணையம் உள்ளாட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கான நாட்களை அறிவித்தது. அதன்படி நேற்று முதல் குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியம், ஊரக உள்ளாட்சி தேர்தல் வேட்பு மனுக்கள் வழங்கும் பணிகளில் அரசு ஊழியர்கள் ஈடுபட்டனர். குறிஞ்சிப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 51 இடங்களும், வார்டு ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு 420 இடங்களும், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினருக்கு 29 இடங்களும், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு  3 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று அரங்கமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 2 பேரும், மேலும் ஒரு ஊராட்சிக்கு ஒருவர் என 3 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தார். இதுபோல் ஆதிநாராயணபுரம், ஆலப்பாக்கம், அனுகம்பட்டு, அரங்கமங்கலம் உள்பட வார்டு உறுப்பினர் பதவிக்கு 48 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

வேப்பூர் : வேப்பூர் அருகே நல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் 64 சிற்றூராட்சி,  21 ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள்,  2 மாவட்ட கவுன்சிலர்கள் பொறுப்பிற்கு வரும் 30ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் நேற்று கொத்தட்டை, கொடிக்களம், பெரியநெசலூர், கோ.கொத்தனூர், சேப்பாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளில் இருந்து தலைவர் பதவிக்கு 6 பேர்  வேட்பு மனு தாக்கல் செய்தனர். 21 ஒன்றிய கவுன்சிலர்களுக்கும், 2 மாவட்ட கவுன்சிலர்களுக்கும் முதல் நாளான நேற்று யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.

Related Stories: