மாவட்டத்தில் 160 கிராமங்களில் வைரஸ் காய்ச்சல் பரவுகிறது

கோவை, டிச.4: கோவை மாவட்டத்தில் ெடங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாகி வருகிறது. வைரஸ் காய்ச்சலால் சிறார் பாதிக்கப்படுவது அதிகரித்தும் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. கொசு உற்பத்தி அதிகரிக்க மழை நீர் தேக்கம் முக்கிய காரணமாக குறிப்பிடப்படுகிறது.

டயர் டியூப், பூந்ெதாட்டி, தேங்காய் தொட்டி, தாழ்வான பகுதி, குப்பை தொட்டிகளில் கொசுக்கள் அதிகமாக இருக்கிறது. தினமும் மழை நீர் தேக்கத்தை அகற்றவேண்டும். அப்போது தான் கொசு புழு (லார்வா) உற்பத்தியை தடுக்க முடியும். ஒரு கொசு 100க்கும் மேற்பட்ட முட்டையிட்டு லார்வா உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.
Advertising
Advertising

நீர் தேக்கம் அகற்றாவிட்டால் பாதிப்பு அதிகமாகி விடும் என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. ஆனால் உள்ளாட்சிகளில் கொசு உற்பத்தி பொருட்கள் அகற்றும் பணி தீவிரமாக நடக்கவில்லை. இதன் காரணமாகவே காய்ச்சல் பரவி வருவது தெரியவந்துள்ளது.  மாவட்ட அளவில், 160 கிராமங்களில் டெங்கு, வைரஸ் காய்ச்சல் அபாய பகுதியாக இருக்கிறது. இங்ேக நோய் தடுப்பு பணிகள் நடத்தவேண்டும் என சுகாதாரத்துறை, உள்ளாட்சிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Related Stories: