திருச்செந்தூர் பாரதியார் தெருவில் டாஸ்மாக் கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

திருச்செந்தூர், நவ.28: திருச்செந்தூர் ஆர்டிஓ தனப்ரியாவிடம் ஒன்றிய திமுக செயலாளர் செங்குழிரமேஷ், நகர திமுக செயலாளர் வாள்சுடலை, கலைசெல்வம், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சுதாகர், முன்னாள் கவுன்சிலர்கள் கோமதிநாயகம், ராஜமோகன் மற்றும் பாரதியார் தெரு ஊர் பொதுமக்கள் சார்பாக கணேசன், வெற்றிவேல், பெரியசாமி, கவுசியா ரமேஷ், மகேஷ் உள்ளிட்ட பலர் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:திருச்செந்தூரில் பாரதியார் தெருவில் நாடார் மற்றும் ஆதிதிராவிட இனத்தவர்கள் கூட்டாக குடியிருந்து வருகிறோம். எங்களுக்குள் எந்தவிதமான பிரச்னைகளும் இல்லாமல் அமைதியாக குடியிருந்து வருகிறோம். எங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை அமையும் பட்சத்தில் இரு பிரிவினரிடையே ஜாதி மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவாகும். எங்கள் பகுதியில் தான் பிரதான சாலை செல்கிறது. இவ்வழியில் தான் அனைத்து அரசு, தனியார் பேருந்துகள், தனியார் மருத்துவமனைக்குச் செல்லும் ஆம்புலன்ஸ்கள் செல்கின்றன. எங்கள் தெரு வழியாகத்தான் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் செல்கின்றனர். பொதுமக்கள் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் காத்திருந்து பஸ் ஏறுகின்றனர். எங்கள் தெருவின் எதிரில் அரசு பொது மருத்துவமனை, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆனந்த விநாயகர் கோயிலும் அமைந்துள்ளது. இவ்வழியாக தினசரி ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றன். எனவே தாங்கள் பாரதியார் தெருவில் மதுபானக்கடை திறக்க அனுமதி வழங்ககூடாது. தவறும்பட்சத்தில் ஊர்பொதுமக்கள் குடும்பத்தோடு ரோட்டில் அமர்ந்து போராடுவோம். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

Related Stories: