கோவில்பட்டி கரிதா பப்ளிக் பள்ளியில் வஉசி நினைவுநாள்

கோவில்பட்டி, நவ. 20:    தேச விடுதலைக்காகப் பாடுபட்ட செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார்  நினைவுநாள் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது.  இதே போல் கோவில்பட்டி எட்டயபுரம் மெயின்ரோட்டில்  செயல்பட்டு வரும் கரிதா பப்ளிக் பள்ளியில்  வ.உ.சிதம்பரனார்  நினைவுநாள் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த பள்ளித் தாளாளர் காசிராஜன், வ.உ.சி. படத்திற்கு மாலை அணிவித்தும், மலர்கள் தூவியும் அஞ்சலி செலுத்தினார். இதைத் தொடர்ந்து மாணவ, மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

 நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் காளீஸ்வரி, நர்மதா, விமலா, சிபானிகிரேஸ், கவிதா, மகேஸ்வரி,  பரமேஸ்வரி, நதியாராணி, எஸ்.பரமேஸ்வரி, அருணாதேவி, டிம்பிள், அபிதா, அபிஸா,  தன்ராஜ், சுடலை, சீனிப்ரியா, பாண்டியலட்சுமி, காயத்ரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதேபோல் கோவில்பட்டி புனித ஓம் கான்வென்ட்  மெட்ரிக் பள்ளியில் முதல்வர் மீனாட்சிசுந்தரி தலைமையில் மாணவ, மாணவிகள் வ.உ.சிதம்பரனாரின் படத்திற்கு மலர்களை தூவியதோடு மவுன அஞ்சலி செலுத்தினர்.

    ஏரல்:  ஏரலில் வஉசி படத்திற்கு சைவ வேளாளர் சங்கத்தினர் மரியாதை செலுத்தினர். ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்து சுதேசி கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதரம்பரனாரின்  83வது நினைவு தினம் ஏரலில் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி இங்குள்ள காந்தி சிலை அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வஉசிதம்பரனார் படத்திற்கு  சைவ வேளாளர் சங்கத்தினர் தலைவர் நங்கமுத்து தலைமையில், தொழிலதிபர் அழகுராமகிருஷ்ணன் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் சங்கச் செயலாளர் கண்ணன் செட்டியார், பொருளாளர் வீரபாகு பிள்ளை, ஐக்கிய வியாபாரிகள் சங்க நிர்வாகி ஆண்டியப்பன் மற்றும் ரத்தினம் உள்ளிட்ட ஏராளமானோர்  பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories: