பார்மசி கல்லூரிக்கான விளையாட்டு போட்டி

கோவை, நவ. 19:  இந்திய பார்மசி கவுன்சில் 58வது தேசிய பார்மஸி வார விழாவை அனைத்து பார்மசி கல்லூரிகளிலும் கொண்டாட அறிவுறுத்தியுள்ளது. மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தவும் உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து, ேகாவை பெரியநாயக்கன்பாளையம் யுனைடெட் பார்மசி கல்லூரியில் பார்மசி மாணவர்களுக்கான 3 நாள் விளையாட்டு போட்டிகள் நேற்று துவங்கியது. இதில், கல்லூரியின் முதல்வர் அழகுராஜா, யுனைடெட் கல்வி குழுமங்களின் தலைவர் சண்முகம், உடற்கல்வி இயக்குனர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மாணவர்கள் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில், மாணவர்களுக்கான கிரிக்கெட், கபடி, வாலிபால் மற்றும் கால்பந்து போட்டிகளும், மாணவிகளுக்கு செஸ், கேரம் மற்றும் த்ரோபால் போட்டிகள் நடந்தது. இதில், நேற்று நடந்த பெண்களுக்கான த்ரோபால் போட்டியில் எட்வர்ட் அணி 2-0 என்ற நேர் செட் கணக்கில் ஹிப்போகிரேட்ஸ் அணியை வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில் மோர்ஸ் அணி 2-0 என்ற கணக்கில் ஆடம்ஸ் அணியை வென்றது. ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டியில் எட்வர்ட் அணி மோர்ஸ் அணியை வென்றது. தொடர்ந்து இன்று, நாளை என இரண்டு நாட்கள் போட்டிகள் நடக்கிறது.

Related Stories: