வேலூர் மாவட்டத்தில் 13 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்றம்

வேலூர், நவ.8: வேலூர் மாவட்டத்தில் 13 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.அதன்படி, கந்திலி வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) கே.தயாளன், அதே ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்(வ.ஊ) ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இங்கு பணியாற்றிய பிரபாவதி, அதே ஒன்றியத்தில் கே.தயாளன் பணியிடத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.  நாட்றம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர்(வ.ஊ) டி.கோபி, அதே ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ) ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இங்கு பணியாற்றிய எஸ்.கனகராஜ், டி.கோபி பணியிடத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) வின்சென்ட் ரமேஷ்பாபு, அணைக்கட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இங்கு பணியாற்றிய எஸ்.பிரேம்குமார் ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்(வ.ஊ) ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்(வஊ) சி.ருத்ரப்பா, மாதனூர் வட்டார வளர்ச்சி அலுவலர்(வ.ஊ) ஆகவும், இங்கு பணியாற்றிய எல்.சந்திரன் ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ) ஆகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Advertising
Advertising

மாதனூர் வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ) என்.விநாயகம், திருப்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்(வ.ஊ) ஆகவும், இங்கு பணியாற்றிய எஸ்.நலங்கிள்ளி மாதனூர் வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ) ஆகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அரக்கோணம் வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ) கே.சாந்தி, அதே ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்(வ.ஊ) ஆகவும், இங்கு பணியாற்றிய ஆர்.செந்தாமரை, அதே ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ) ஆகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சோளிங்கர் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ்.பாஸ்கரன், ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவலர்(வ.ஊ) ஆக பதவி உயர்வு அளிக்கப்பட்டு

மாற்றப்பட்டுள்ளார்.

Related Stories: