வீடற்ற ஆதிதிராவிடர், பழங்குடியினர் வீட்டுமனைக்கு விண்ணப்பிக்கலாம்

காஞ்சிபுரம், அக்.18: வீடற்ற ஆதிதிராவிடர், பழங்குடியினர், வீட்டுமனைக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது. வீடற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மக்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க நில எடுப்பு செய்யும் திட்டத்தை ஆண்டு தோறும் அரசு செயல்படுத்தி வருகிறது.

இதையொட்டி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடப்பு 2019 - 2020ம் ஆண்டில் தனியார் நில உரிமையாளர்கள் அரசு நிர்ணயிக்கும் விலைக்கு நிலத்தை தர முன் வரும் நேரங்களில், மேற்கண்ட நில உரிமையாளர்களும் வீடற்ற வீட்டுமனை கோரும் ஆதிதிராடவிடர் மற்றும் பழங்குடியின மக்களும், நேரடியாக காஞ்சிபுரம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் அதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: