விளாத்திகுளத்தில் பனை விதைகள் மரக்கன்று நடும் விழா

விளாத்திகுளம், அக். 16: விளாத்திகுளத்தில் இயற்கையை பாதுகாக்க வலியுறுத்தி மரக்கன்றுகள்,  பனை விதைகள் நடும் விழா நடந்தது. விளாத்திகுளம் சிதம்பரநகர் பகுதியில் விளதைமலர் வாட்ஸ்அப் குழு மற்றும் அப்பகுதி பொதுமக்கள் சாா்பில் இளைஞர்களிடையே மரம் வளர்த்தல் மற்றும் இயற்கையைப் பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மரக்கன்றுகள் மற்றும் பனை விதைகள் நடும் விழா நடத்தப்பட்டது.

இதில் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள், பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்று மரக்கன்றுகள், பனை விதைகள் நாட்டினர்.
Advertising
Advertising

மேலும் அப்பகுதியில் கிடந்த பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றியதோடு சாலையோரங்களை ஆக்கிரமித்திருந்த சீமை கருவேல மரங்கள் மற்றும் வைப்பார் ஆற்றங்கரையில் இருந்த கருவேலமரங்களையும் அகற்றினர். விழாவில் சிதம்பர நகர் கிராம பொருளாளர் ஜெயராஜ், இளைஞர்கள் செல்வராஜ், ஸ்டீபன், ராஜதுரை ஜெயபால், கற்பகமுத்து, வினோத், செல்வகுமார், முனியசாமி, சுரேஷ், கிறிஸ்டோபர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை விழா விளதை மலர் வாட்ஸ் அப் குழு சமூக சேவகர் அரசகுமார் செய்திருந்தார்.

Related Stories: