வீட்டுமனைப்பட்டா கேட்டு நரிக்குறவர்கள் கலெக்டரிடம் மனு

காஞ்சிபுரம், அக். 15: காஞ்சிபுரம் மாவட்டம் அய்யங்கார்குளம் பகுதியில் வசிக்கும் நரிக்குறவர் இனமக்கள் வீட்டுமனைப்பட்டா கேட்டு மாவட்ட கலெக்டர் பொன்னையாவிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது, “காஞ்சிபுரம் மாவட்டம், அய்யங்கார்குளத்தில் மீனவர் குடியிருப்பு பின்புறம் சுமார் 10 குடும்பங்கள் கூரைவீடு கட்டி வசித்து வருகிறோம். நாங்கள் குடியிருக்கும் இடத்திற்கு இதுவரை பட்டா வழங்கவில்லை. பட்டா இல்லாததால் அடிப்படை வசதிகள் இதுவரை ஏதும் செய்துதரப்படவில்லை. மின் இணைப்பு இல்லாமலும், தெருவிளக்கு இல்லாமலும், குடிநீர் வசதி இன்றியும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறோம்.

அடித்தட்டு மக்களாகிய எங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க அதிகாரிகள் மறுக்கிறார்கள். நாங்கள் குடியிருப்பதற்கான ஆதராமாக வருவாய்த்துறை மூலம் குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் வழங்கப்பட்டு பயன்படுத்தி வருகிறோம். 5 ஆண்டுகளாக தொடர்ந்து வசித்து வருபவர்களுக்கு பட்டா வழங்கலாம் என்ற அரசு ஆணைப்படி நாங்கள் குடியிருக்கும் இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்து சிறப்பு திட்டத்தின் கீழ் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: