ஏரல் பள்ளியில் வித்யாரம்பம்

ஏரல், அக். 10:  விஜயதசமியை முன்னிட்டு ஏரல் லோபா  மெட்ரிக் உயர்நிலைப் பள்ளியில் மழலையருக்கான வித்யாரம்ப  விழா நடந்தது. பள்ளி நிறுவனர் லோபா முருகன் தலைமை  வகித்தார். பள்ளி முதல்வர் முகமது ரபி, அலுவலக மேலாளர் எஸ்தர் ஜெயின்மேரி  முன்னிலை வகித்தனர். இதில் பங்கேற்ற மழலையர்களின் கையை பிடித்து  மஞ்சள் தேய்த்த அரிசியில் அ என்ற முதல் எழுத்தை எழுத தாளாளர்  லோபா முருகன், ஆசிரியர்கள் ஜெயசங்கரி, வீரலெட்சுமி மற்றும் மாணவர்களின்  பெற்றோர்கள் பயிற்சி அளித்தனர். விழாவில் ஆசிரியர்கள் வஹீதாபானு, ராதாகண்ணன் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

Advertising
Advertising

Related Stories: