இளம்புவனத்தில் தேவர் சிலை திறப்பு விழா

எட்டயபுரம், அக். 10: எட்டயபுரம் அருகே இளம்புவனத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை திறப்பு விழா நடந்தது. தலைமை வகித்த பசும்பொன் தேசிய கழக நிறுவனர் ஜோதிமுத்துராமலிங்கம், சிலையைத் திறந்துவைத்துப் பேசினார். முன்னிலை வகித்த சின்னப்பன் எம்.எல்.ஏ., தேவரின் சிறப்புகளை எடுத்துரைத்தார். இதைத்தொடர்ந்து குடமுழுக்கு விழா நடந்தது. விழாவில் தூத்துக்குடி கூட்டுறவு ஒன்றிய தலைவர் தனபதி, எட்டயபுரம் அதிமுக நகரச் செயலாளர் உதயகுமார், இளம்புவனத்தை சேர்ந்த சின்னச்சாமி. சவுந்திரபாண்டியன், முருகன், குமார், மாயக்கண்ணன், மருதுபாண்டியன், கணேசன், பேச்சியப்பன், தர்மராஜ், கருத்ததுரை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertising
Advertising

Related Stories: