தொழிலாளி கொலை வழக்கு கோவில்பட்டி கோர்ட்டில் கான்ட்ராக்டர் சரண்

கோவில்பட்டி, அக். 10: அம்பையில் தொழிலாளி வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், கட்டிட கான்ட்ராக்டர் கோவில்பட்டி  கோர்ட்டில் சரணடைந்தார். அம்பை அடுத்த பிரம்மதேசம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜகோபால் (65). கூலி தொழிலாளியான இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த  கட்டிட கான்ட்ராக்டரான மேகநாதன் மகன் கணேசன் (38) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில் கடந்த 6ம் தேதி வீட்டின் முன்பாக ராஜகோபால் நின்றுகொண்டிருந்த போது அங்கு வந்த கணேசன் தகராறு செய்தார். இதுகுறித்து இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த கணேசன், ராஜகோபாலை அரிவாளால் வெட்டி படுகொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றார்.

இதுகுறித்து வழக்குப் பதிந்த அம்பை போலீசார், தப்பியோடிய கணேசனை தேடி வந்தனர். இந்நிலையில் கணேசன், கோவில்பட்டி குற்றப்பிரிவு நடுவர் எண் 1ம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு மாஜிஸ்திரேட் முரளிதரன் உத்தரவிட்டார். அதன்பேரில் கணேசனை போலீசார் பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories: