சரள் மண்ணுடன் 9 லாரிகள் கடத்தல்

திருச்செந்தூர்,  அக். 10: திருச்செந்தூர்  அருகே கீழநாலுமூலைகிணறு, அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் முனீஸ்வரன் (28).  தனியார் நிறுவன ஊழியர். இவர் வேலை செய்யும் நிறுவனத்துக்கு சொந்தமான  இடத்தில் சரள்மண் அள்ளுவதற்காக, கடந்த 4ம் தேதி இரவு 10 மணிக்கு முனீஸ்வரன் 9 லாரிகளுடன் சென்றார். அப்போது அங்கு வந்த மர்மக்கும்பல்  முனீஸ்வரனுடன் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்தது. மேலும் 9 லாரிகளில் சரள்மண்ணை நிரப்பி மர்மகும்பல் கடத்திச் சென்றது.

இதுகுறித்து முனீஸ்வரன், திருச்செந்தூர்  போலீசில் புகார் செய்தார். விசாரணையில் மண்ணுடன் லாரிகளை கடத்தியது, திருச்செந்தூர் அடுத்த நா.முத்தையாபுரத்தைச் சேர்ந்த  விநாயகமூர்த்தி என்ற விடுதலைசெழியன், தனுஷ்கோடி, வடிவேல்குமார், இவரது  தம்பி சுதாகர், பிரபாகரன், வெட்டும்பெருமாள், சுரேஷ், ஆனந்த் மற்றும்  பரமன்குறிச்சியைச் சேர்ந்த முத்துசெல்வம், மெஞ்ஞானபுரத்தைச் சேர்ந்த  அந்தோணி ராவணன் மற்றும் பார்த்தால் அடையாளம் காட்டக் கூடிய  சிலர் என தெரிய வந்தது. இதையடுத்து திருச்செந்தூர் போலீசார் வழக்குப்பதிந்து அவர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: