அன்னவாசல் பரம்பூரில் குற்ற தடுப்பு விழிப்புணர்வு முகாம்

புதுக்கோட்டை,  அக்.2:  அன்னவாசல் அருகே உள்ள பரம்பூரில் குற்ற தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு டிஎஸ்பி சிகாமணி தலைமை தாங்கினார். முகாமில் காவல் துணை கண்காணிப்பாளர் குணசேகரன் மற்றும் சிகாமணி ஆகியோர் பேசுகையில்,குற்றங்களை தடுப்பதில் காவல் துறை மட்டும் கவனம் செலுத்தினால் போதாது பொதுமக்களும் அதற்கான ஒத்துழைப்பு தரவேண்டும். இப்பகுதி மக்கள் வீட்டை பூட்டிவிட்டு வெளியே செல்லும்போது, பக்கத்து வீட்டினரிடமும், காவல் துறையிடமும் தகவல் அளிக்க வேண்டும். போலீஸ் மீது முழு நம்பிக்கை வைக்க வேண்டும். இதற்காக நாங்கள் தனியாக பதிவேடு வைத்து தனிக்கவனம் செலுத்தி வருகிறோம்.

இப்பகுதியில் சமூக அக்கறை கொண்டவர்கள் தங்கள் பகுதியில் சாலை முழுவதும் கவனிக்கும் வகையில் ஆங்காங்கே கேமராக்கள் வைக்க வேண்டும். புதிய நபர்களை கண்டால் அவர்களை நீங்கள் விசாரித்து அடையாளம் காண வேண்டும். முன்பின் தெரியாதவர் யாரையும் வீட்டிற்குள் அனுமதிக்க கூடாது என்றார்.நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் வீரமணி, ஜெய மற்றும் காவல் துறையினர், பொதுமக்கள், வியாபாரிகள், சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: