வடுகப்பட்டி ஊராட்சியில் சவுக்கு கூடை பின்னும் தொழிலாளி தீவிரம்

 

கந்தர்வகோட்டை,ஜூன் 21: வடுகப்பட்டி ஊராட்சியில் சவுக்கு கூடை பின்னும் பணியில் தொழிலாளிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் வடுகப்பட்டி ஊராட்சியில் உள்ள வாண்டையன்பட்டி கிராமத்தில் சவுக்கு, சிறுகுச்சி, தைலமர சிறு குச்சிகளை கொண்டு கூடை முடைந்து வருகிறனர். இவர்கள் கூறும் போது, சில ஆண்டுகளுக்கு முன்பாக அனைத்து சவுக்கு, தைல மர காடுகளில் சிறு குச்சிகளை சேகரிந்து அதனை தட்டு கூடையாகவும், கோழி கவிழ்க்கும் கூடையாகவும், குப்பை அள்ளும் கூடையாகவும் பின்னி விற்பனை செய்துவந்தோம்.

ஆனால் தற்சமயம் பிளாஸ்டிக் கூடை, அலுமினிய கூடைகள், விவசாயிகள் பொதுமக்கள் பயன்படுத்துவதால் இந்த கூடைகள் விற்பனை குறைந்துள்ளது. எங்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிப்படைந்து உள்ளது. பூமிக்கு நச்சுத்தன்மை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் வகைகளை குறைத்துக் கொண்டு இயற்கை பொருள்களை பயன்படுத்தி பூமிக்கு எங்களுக்கும் நன்மை ஏற்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post வடுகப்பட்டி ஊராட்சியில் சவுக்கு கூடை பின்னும் தொழிலாளி தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: