விவசாயிகளுக்கு அழைப்பு; பாதாள சாக்கடை கழிவுநீர் கசிவதால் கடும் துர்நாற்றம்

புதுக்கோட்டை, ஜூன் 24:புதுக்கோட்டையில் பாதாள சாக்கடை கழிவுநீர் கசிவதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனை சரிசெய்யக்கோரி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை டிவிஎஸ் கார்னர் அருகே கலீப் நகர் நான்காம் வீதி மறுப்பிணி சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்புக்கு அருகாமையில் உள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து கழிவுநீர் வெளியாகி அந்த பகுதி முழுவதும் கழிவுநீர் சூழ்ந்துள்ளது.

அதுமட்டுமின்றி அடுக்குமாடி குடியிருப்புக்கு செல்லும் நுழைவு வாயிலிலும் கழிவுநீர் சூழ்ந்து துர்நாற்றம் வீசுவதால் அங்கு வசிக்கக்கூடிய மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. மேலும் இது குறித்து கடந்த இரு தினங்களாக புகார் தெரிவித்தும் நகராட்சியினர் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் 50க்கும் மேற்பட்டோர் நேற்று இரவு டிவிஎஸ் கார்னரில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த மறியல் போராட்டத்தால் டிவிஎஸ் கார்னரிலிருந்து மேட்டுப்பட்டி செல்லும் சாலையில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனைய டுத்து சம்பவ இடத்திற்கு சென்ற நகர காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நாளைக்குள் கழிவுநீர் பிரச்சனைக்கு தீர்வு காண நகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலந்து சென்றனர்.

The post விவசாயிகளுக்கு அழைப்பு; பாதாள சாக்கடை கழிவுநீர் கசிவதால் கடும் துர்நாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: