பெரம்பலூரில் எஸ்டிபிஐ கட்சியின் 16ம் ஆண்டு தொடக்க விழா

பெரம்பலூர்,ஜூன் 23: எஸ்டிபிஐ கட்சியின் 16ம் ஆண்டு துவக்க நாளை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கட்சி கொடி யேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. எஸ்டிபிஐ கட்சியின் 16ஆம் ஆண்டு துவக்க நாளை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் எஸ்டிபிஐ கட்சிக் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சாஜஹான் தலைமையிலும், சத்திரமனையில் மாவட்டத் தலைவர் முஹம்மது ரபீக் தலைமையிலும், லெப்பைக்குடிக்காட்டில் மாவட்ட பொதுசெயலாளர் அப்துல்கனி தலைமையிலும், வி.களத்தூரில் மாவட்ட துணைத் தலைவர் முஹம்மது பாரூக் தலைமையிலும் மற்றும் விஸ்வக்குடி, விஜயகோபாலபுரம், புதுஆத்தூர், பாடாலூர், பூலாம்பாடி ஆகிய கிளைகளிலும் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட, நகர, கிளை நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் கலந்து கொண்டனர்.

The post பெரம்பலூரில் எஸ்டிபிஐ கட்சியின் 16ம் ஆண்டு தொடக்க விழா appeared first on Dinakaran.

Related Stories: