கந்தர்வகோட்டையில் கூட்டுறவு வங்கி மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு கடன் மேளா

 

கந்தர்வகோட்டை, ஜூன் 22: கந்தர்வகோட்டையில் கூட்டுறவு வங்கி மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் மேளா நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை நகரில் உள்ள புதுக்கோட்டை மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கி கந்தர்வகோட்டை கிளையில் வங்கி மேலாளர் முருகேசன் தலைமையிலும், கடன் பிரிவு மேலாளர் மட்டங்கால் முருகையன் முன்னிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது. கடன் பெற விண்ணப்பத்துடன் யூடிஐ ஆவணம், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், விலை புள்ளி பட்டியல், நான்கு புகை படங்கள், இரண்டு நபர் ஜாமீன் அளித்து விண்ணப்பம் செய்தனர்.

மேலும் இந்த வங்கியில் மகளிர் சுய உதவி குழு கடன், சிறு வணிக கடன், பணி புரியும் மகளிர் கடன், தொழில் முனைவோர் கடன், வீடு அடமான கடன் கடன், பண்ணை சாரா கடன் மேலும் விரைவு நகை கடன் சேவையும் செய்து வருகிறோம் என வங்கி மேலாளர் முருகேசன் கூறுகிறார். தமிழகத்திலேயே வைப்புத் தொகைக்கு அதிகபட்டி கொடுப்பது நமது வங்கி தான் என்று கூறினார். மக்கள் நமது வங்கி சேவையை பயன்படுத்தி வாழ்வில் வளம் பெற வேண்டும் என்று தெரிவித்தார்.

The post கந்தர்வகோட்டையில் கூட்டுறவு வங்கி மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு கடன் மேளா appeared first on Dinakaran.

Related Stories: