ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம்

உத்திரமேரூர், செப்.20: உத்திரமேரூர் அடுத்த களியாம்பூண்டி கிராமத்தில் செயல்படும் தனியார் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் உத்திரமேரூர் வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது.காப்பக நிர்வாகி கணேஷ்குமார் தலைமை தாங்கினார். மூத்த வழக்கறிஞர் கருணாநிதி முன்னிலை வகித்தார். உத்திரமேரூர் வட்ட சட்டப் பணிகள் குழு தலைவரும் உத்திரமேரூர் உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியுமான இருதயராணி கலந்து கொண்டு மாணவ, மாணவிகளின் உரிமைகள் மற்றும் கடமைகள் குறித்து விளக்கமளித்தார்.

மேலும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு, பாலியல் தொல்லைக்கு சட்டத்தின் மூலம் தீர்வு காண்பது. குழந்தை தொழிலாளர் அகற்ற அனைவரும் பள்ளிக்கு செல்ல வேண்டும். புத்தகங்கள் மற்றும் நாளிதழ்களை படிப்பதன் மூலம் தங்கள் அறிவுத்திறனை வளர்க்க உதவும். எனவே பள்ளி பயிலும் மாணவ, மாணவியர்கள் அனைவரும் தினமும் புத்தகம் மற்றும் நாளிதழ்களை படியுங்கள் என்றார்.

Related Stories: