கோரம்பள்ளம் குளத்திற்கு தண்ணீர் திறப்பு

தூத்துக்குடி, செப். 20:வைகுண்டம் வடகாலிலிருந்து கோரம்பள்ளம் குளத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.வைகுண்டம் வடகாலிருந்து கோரம்பள்ளம் குளத்திற்கு தண்ணீர் திறக்க கலெக்டர் சந்தீப்நந்தூரி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதற்காக போடம்மாள்புரத்திலுள்ள மடை மதகிற்கு சிறப்பு பூஜை செய்து பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ரகுநாதன் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் விவசாய சங்க தலைவர்கள் அத்திமரப்பட்டி அழகுராஜா, கோரம்பள்ளம் முத்துதங்கம், காலாங்கரை சுந்தரபாண்டியன், கூட்டாம்புளி ராமச்சந்திரன், குலையன்கரிசல் சுபாஷ் மற்றும் திருமால், சக்கையா உள்ளிட்ட விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

Advertising
Advertising

Related Stories: