திருச்செந்தூர் அருகே குளத்து மண் கடத்திய 4 லாரிகள் சிறைபிடிப்பு

திருச்செந்தூர், செப். 17: திருச்செந்தூர் அருகே குளத்தில் இருந்து மண் கடத்திச்சென்ற 4 லாரிகளை பொதுமக்களும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் சிறைபிடித்தனர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது. திருச்செந்தூர் அடுத்த நத்தகுளத்தில் இருந்து நேற்று அனுமதியின்றி 4 லாரிகளில் மண் அள்ளப்பட்டு கடத்திச்செல்லப்பட்டது. இதுகுறித்து தெரியவந்ததும் ஆவேசமடைந்த பொதுமக்களும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் தெப்பக்குளம் அருகே 4 லாரிகளையும் மடக்கிப் பிடித்து சிறைபிடித்தனர்.

Advertising
Advertising

 விடுதலை சிறுத்தைகள் கட்சி இளம்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை மாவட்ட அமைப்பாளர் விடுதலை செழியன் தலைமையில் மாவட்ட துணை அமைப்பாளர் ராவணன், உடன்குடி ஒன்றிய அமைப்பாளர் முத்துசெல்வன், தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட துணை அமைப்பாளர் தனுஷ்கோடி, சாத்தான்குளம் ஒன்றிய துணைச் செயலாளர் சுரேந்திரன் உள்ளிட்ட பலர் இந்த சிறைபிடிப்பு போராட்டத்தில் பங்கேற்றனர்.  தகவலறிந்து விரைந்துசென்ற திருச்செந்தூர் தாலுகா இன்ஸ்பெக்டர் முத்துராமன் மற்றும் போலீசார் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் 4 லாரிகளையும் மீட்டு காவல்நிலையம் கொண்டு வந்தனர். அடுத்தடுத்து நடந்த சம்பவங்களால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Related Stories: