டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் எதிரொலி அனைத்து பள்ளிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

* பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு

Advertising
Advertising

வேலூர், செப்.15: அனைத்து பள்ளிகளுக்கும் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலில் இருந்து தப்பித்துக்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார். தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் கூறியிப்பதாவது: பள்ளி வகுப்பறையை சுற்றி தண்ணீர் தேங்கி இருந்தால் அதை உடனடியாக அகற்ற வேண்டும். டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் வராமல் தடுக்கும் பொருட்டு பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும். பள்ளிகளில் தண்ணீர் தொட்டிகளை மூடி வைக்க வேண்டும். பள்ளிகளில் தினமும் நடக்கும் காலை வணக்கம் கூட்டத்தில் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும்.

இந்நிலையில் மழைக்காலம் தொடங்கியுள்ள தருணத்தில் டெங்கு வருவதற்கான சாத்தியம் அதிகம் இருப்பதால் அதனை தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மிக முக்கியமாக பள்ளியிலோ அல்லது பள்ளியை சுற்றி உள்ள பகுதிகளில் தண்ணீர் தேங்கி இருந்தால் உடனடியாக அதனை அகற்றிவிடவேண்டும். பகலில் கடிக்கும் கொசுவினால் டெங்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் இதுகுறித்த விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: