விசாரணைக்கு அழைத்துச் ெசன்று எலக்ட்ரீஷியன் மீது தாக்குதல்

கோவில்பட்டி, செப். 15: கோவில்பட்டி அருகே விசாரணைக்கு அழைத்துச் சென்ற கணவரை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவில்பட்டி அருகே கடம்பூரை அடுத்த கே.சிதம்பராபுரத்தை சேர்ந்த அச்சையா மகன் அழகர்சாமி (40). எலக்ட்ரிஷியனான இவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த செல்வராஜ்க்கும் முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த 9ம் தேதி செல்வராஜ் வீட்டில் நடந்த நிகழ்ச்சிக்கு வந்த உறவினர்கள் வாகனங்களை அங்குள்ள வீடுகள் முன்பும், அழகர்சாமி வீட்டின் முன்பும் நிறுத்தப்பட்டிருந்தது.  இதை அழகர்சாமி கண்டித்துள்ளார். இதனால் அவருக்கும், செல்வராஜிக்கும் தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து செல்வராஜ், கடம்பூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் அழகர்சாமி மீது வழக்கு பதிந்து 10ம் தேதி இரவு கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்தனர்.

Advertising
Advertising

விசாரணையின்போது போலீசார், அழகர்சாமியை தாக்கியதில் அவர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ஜாமீனில் வந்த அவர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரை தாக்கிய 2 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனைவி மல்லிகா புகார் தெரிவித்துள்ளார்.

Related Stories: