ஓய்வு பெற்ற மின் ஊழியர்கள் குறைகேட்பு கூட்டம்

ஈரோடு, செப். 11:   ஈரோடு மண்டலத்திற்குட்பட்ட மின் வாரிய அலுவலகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான குறைகேட்பு கூட்டம் 18ம் தேதி ஈரோட்டில் நடக்கிறது.இதுகுறித்து ஈரோடு மண்டல தலைமை பொறியாளர் சந்திரசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஈரோடு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள மின்வாரிய அலுவலகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற மின்வாரிய அலுவலர், பணியாளர்களின் குறைகளை கேட்கவும், மனுக்களை பெற்று, உடனடியாக தீர்த்து வைக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
Advertising
Advertising

இக்குழுவினர் ஒவ்வொரு காலாண்டுக்கும் ஒரு முறை ஈரோடு மண்டல அலுவலகத்தில் கூடி மின்வாரியத்தில் இருந்து ஓய்வு பெற்ற அலுவலர், பணியாளர்களின் குறைகளை நேரில் கேட்டு, மனுக்களை பெற்று வருகிறது. இதன்படி மூன்றாம் காலாண்டிற்கான குறைதீர்க்கும் கூட்டம் 18ம் தேதி காலை 11 மணிக்கு ஈரோடு ஈ.வி.என்., சாலையில் உள்ள மின்வாரிய ஆய்வு மாளிகையில் நடக்கிறது. எனவே இக்கூட்டத்தில் ஓய்வு பெற்ற அலுவலர், பணியாளர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: