தூத்துக்குடியில் கொள்ளை கும்பலை சேர்ந்த 5 பேர் கைது

தூத்துக்குடி, செப்.11: தூத்துக்குடி திரேஸ்புரம் அருகேயுள்ள மாதவநாயர் காலனியில் சிலர் சட்ட விரோதமாக கூடிஇருப்பதாக தூத்துக்குடி வடபாகம் போலீசாருக்கு  தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் மாதவன்நாயர் காலனியில் உள்ள ஒரு காட்டுப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுங்கியிருந்த சிலரை பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில் அவர்கள் தூத்துக்குடி சாமுவேல்புரத்தை சேர்ந்த டேனி(20), ஸ்டேட் பேங்க் காலனியை சேர்ந்த சாம் ஜோசுவா(20), ஜாய்சன்(19) பூபால்ராயர்புரத்தை சேர்ந்த சிம்சன் ஜெனிஸ் ராஜா(25), சங்குகுளி காலனியை சேர்ந்த அன்டோ ஜோசப் ஜேசுராஜ்(21) என்பதும் இவர்கள் அப்பகுதியில் பூட்டிய வீடுகளில் கொள்ளையடிப்பது குறித்து  திட்டமிட்டு, கூட்டுசதியில் ஈடுபட்டிருந்ததும் இருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் 5 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து அரிவாள், கத்தி, கம்பி உள்ளிட்ட  ஆயுதங்கள் பறிமுதல் செய்தனர். இதில் டேனி என்பவர் மீது தூத்துக்குடி வடபாகம் மற்றும் தாளமுத்துநகர் காவல் நிலையங்களில் பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: