ஆற்காடு அருகே விளாப்பாக்கம் அரசு பள்ளியில் சேதமடைந்த திருவள்ளுவர் சிலை பொதுமக்கள் கடும் அதிருப்தி

ஆற்காடு, செப்.11: ஆற்காடு அடுத்த விளாப்பாக்கம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் சேதமடைந்துள்ள திருவள்ளுவர் சிலையை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. ஆற்காடு அடுத்த விளாப்பக்கம் பேரூராட்சியில் அறிஞர் அண்ணா அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் நுழைவு வாயிலில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. சிலையை சரிவர பராமரிக்காததால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்த சிலை சேதமடைந்தது.

Advertising
Advertising

இதனால், சேதமடைந்த திருவள்ளுவர் சிலையை பள்ளி நிர்வாகத்தினர் மூடி வைத்துள்ளனர். ேசதமடைந்து நிலையில் உள்ள சிலையை இதுநாள் வரை சீரமைக்கவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.இந்நிலையில், சேதமடைந்த நிலையில் உள்ள திருவள்ளுவர் சிலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் சார்பில் தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன், கலெக்டர் சண்முகசுந்தரம், மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர். மேலும், நேற்று ஆற்காடு தாலுகா அலுவலகத்தில் மண்டல துணை தாசில்தார் சுரேஷிடம் சிலையை சீரமைக்க கோரி மனு அளிக்கப்பட்டது.

Related Stories: