ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை, செப்.10:ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கையை கைவிடக்கோரி இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் கோவை முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன் தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்தல், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கையை கைவிடுதல் உள்ளிட்ட 2 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட செயலாளர் சரவணக்குமார் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Advertising
Advertising

Related Stories: