அய்யர்மலை அரசு கல்லூரியில் புதிய பாட பிரிவில் மாணவர் சேர்க்கைக்கு கலந்தாய்வு 29ம் தேதி நடக்கிறது

குளித்தலை, ஆக. 22: கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த அய்யர்மலை அரசு கல்லூரி முதல்வர் கவுசல்யா தேவி புதிய பாடப் பிரிவுகளில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு குறித்து ஒரு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார் அதில் குறிப்பிட்டுள்ளதாவது:அய்யர்மலை அரசு கல்லூரிக்கு இந்த 2019- 20 கல்வி ஆண்டில் புதிதாக இளநிலை தாவரவியல் மற்றும் விலங்கியல் பாட பிரிவு துவங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. பாடப்பிரிவுகளில் சேர்வதற்கு விருப்பம் உள்ள மாணவ, மாணவிகள் விண்ணப்பத்தினை அலுவலகத்தில் பெற்று கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை வரும் 28ம் தேதிக்குள் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். இக்கல்லூரியில் ஏற்கனவே விண்ணப்பித்து இடம் கிடைக்காதவர்கள் புதிதாக விண்ணப்பிக்க வேண்டியதில்லை. மேலும் புதிதாக தொடங்கப்படும் பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வருகிற 29ம் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. அப்போது மாணவர்கள் சேர்க்கைக்கு வரும்போது தங்களின் அசல் மாற்றுச் சான்றிதழ் பிளஸ் 1, பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல், அசல் சாதி சான்று, ஆதார் அட்டை இவைகளின் நகல்களை இரண்டு மற்றும் கல்லூரிக்கு செலுத்த வேண்டிய கட்டண தொகை அனைத்தும் கொண்டு வர வேண்டும். வரும்போது கட்டாயம் பெற்றோரை அழைத்து வர வேண்டும் என்று செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: